Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் சூசையே நீ மாவளனே  


சூசையே நீ மாவளனே
நீதிமான் என்ற தந்தையே
சாட்சியே நீ மாமுனிவனே
தன்னலம் இல்லா புனிதரே
வாழ்க வாழ்க வாழ்க நின் பெயரே
வளர்க வளர்க வளர்க நின் புகழே

விண்ணுலகில் உள்ள செல்வம்
மண்ணுலகில் தவழ்ந்தது உன் கையிலே
மாமரியின் துணைவரே
மாசில்லாத முனிவரே எம் தந்தையே

கற்பு என்னும் புண்ணியத்தில்
பற்று உள்ள மாணிக்கமே
தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில்
தரணியில் வாழ்ந்து நிள்ற மாவளனே


உழைப்பென்னும் உயர்வை
உன்னதமாச் செய்த உத்தமரே
இறைமகன் தந்த திருச்சபையின்
பாதுகாவல் நீயே






 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!