Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் சூசை தந்தையே எங்கள்  
தந்தையே எங்கள் புனிதரே சூசை தந்தையே
பமகமப பமகமப தஸநிஸ தநிபா
தஸஸமபம பபகஸஸ மநிதஸரிநி ரிஸநிதபா

சூசை தந்தையே எங்கள் புனிதரே
தொழிலாளர்களின் பாதுகாவலரே
தரணியர் யாம் ஜெபிக்கின்றோம்
பரிந்து பேசிடுவாய்

நேர்மையுடன் வாழ்ந்தீர் தீதிமானென்றோம்
அமைதியுடன் வாழ்ந்தீர் அன்புப் புனிதரென்றோம்
இறைவனின் திருவுளம் செயல்படத் துணிந்தீர்
ஆவியின் அருள் துணையில் உறுதுணை கொண்டீர்
மரியின் கணவராய் இயேசுவின் தந்தையாய்
புனித வாழ்வின் சிகரமானீர்

உழைத்து உயர்வு கண்டீர் உழைக்கக் கற்றுத் தந்தீர்
உழைப்பவரின் குடும்பங்களை அரவணைக்க வேண்டுகிறோம்
எளிமைக் காட்சிதனை கேடயமாய்க் கொண்டீர்
வாழ்வில் அர்ப்பணத்தை அவனியில் சொன்னீர்
உழைத்து வாழும் உயர்ந்த பண்பை
மக்கள் மனதில் நிலைத்து நின்று
புனித வாழ்வின் சிகரமானீர்




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!