புனித சூசையப்பர் | பாதுகாவலரே |
பாதுகாவலரே எம்மைப் பாதுகாப்பவரே உம்மை வாழ்த்த வந்தோம் எங்கள் சூசை மாமுனியே எமக்கு வழியானாய் எமக்குத் துணையானாய் எங்கள் வழிகாட்டியே எமக்கு விழியானாய் எமக்கு ஒளியானாய் எங்கள் சூசையப்பரே இறைமகன் இயேசுவை இவ்வுலகில் திறம்பட வளர்த்திட்ட பெருந்தகையே வணங்குகிறோம் உம்பாதத்திலே வழிநடத்தும் உம் பாதையிலே மலரச் செய்யும் எம் மனங்களையே மணம் பரப்பும் எம் வாழ்வினிலே போற்றி போற்றி வளனே போற்றி (2) உழைப்பின் மேன்மையை உணர்ந்தவரே வியர்வை சிந்தி உழைத்தவரே கன்னிமையின் காவலரே கன்னி மரியாளின் துணையாளரே விண்ணகத் தந்தை தேர்ந்தவரே இந்த மண்ணகம் வணங்கும் மாவளனே |