புனித சூசையப்பர் | நேசத் தந்தையே சூசை தந்தையே |
நேசத் தந்தையே சூசை தந்தையே எம்மை என்றும் பாது காக்கும் அன்புத் தந்தையே எங்கள் இதயம் வாழுகின்ற பாசத் தந்தையே நேர்மையான மனிதனாக வாழ்ந்தவரே வானதூதர் சொன்னதுபேல் நடந்தவரே தாய்க்கும் சேய்க்கும் நிழலாகநின்றிட ஊரும் உறவும் துறந்தவர் நீர் மகிழ்ந்தோம் புகழ்ந்தோம் பாதுகாவலர் நீர் தானே கன்னித் தாயின் கணவராக வாழ்ந்தவரே தச்சனாக தனை வருத்தி உழைத்தவரே உழைப்பின் மேன்மையை எல்லோர்க்கும் உணர்த்தினீர் உழைக்கும் மக்களின் பாதுகாவலர் நீர் அழைத்தோம் அணுகினோம் ஆதரிப்பாய் எந்நாளும் |