Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் நாளும் இயேசுவின் அருளை வழங்கும்  

லீலி மலரே அமைதி நிலவே தூய வளனாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே

நாளும் இயேசுவின் அருளை வழங்கும் தூய வளனாரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தூய வளனாரே
வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் சூசை தந்தையே
வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கோவில் புனிதரே

உழைக்கும் மக்கள் யாவர்க்கும் பாதுகாவல் நீரன்றோ
படிக்கும் பிள்ளைகள் யாவர்க்கும் உற்ற துணையும் நீரன்றோ
நீதிமானாய் நாங்கள் உம்போல் விளங்கச் செய்திடுவாய்
உழைப்பால் உயரும் தூய மனதை எமக்கு வழங்கிடுவாய்
லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)

வறுமை சோர்வு கவலைகள் எம்மை வாட்டும் பொழுதிலே
ஏங்கும் எம்மைத் தேற்றுமை கரத்தால் எம்மைத் தாங்குமே
உன்னாலன்றி வேறு யார் எந்தன் பக்கம் நின்றிடுவார்
பாசம் பொங்கும் விழியால் எந்தன் உள்ளம் பார்த்திடுவார்
லீலி மலரே அமைதி நிலவே எங்கள் காவலரே (2)
 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!