Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் யேசு பாலனை மார்பிலே  
யேசு பாலனை மார்பிலே ஏந்திடும் சூசை தூயவனே
பாசம் பொங்கிடும் தந்தாய் என் முகம் பாராய் மாதவனே

மன்னவர் போற்றிடும் முத்தான உன்னை மாமறை போற்றிடுதே
வெண்மலர் லீலியில் கண்மலர் எங்கள் வேதனை தீர்த்திடுதே
மீட்பருக்காகவே வாழ்ந்தாய் மீட்டாய் எம்மையுமே
சேர்த்தாய் பொற்பாதமே காப்பாய் அற்புதமே

நெற்றி வேர்வைகள் சிந்திட தச்சு வேலைகள் செய்தாயே
வெற்றி தோல்விகள் யாவிலும் தேவனை வாழ்த்தி மகிழ்ந்தாயே
வானமும் பூமியும் தந்டோம் வந்தோம் உன் பதமே
எம் தாய் மாமரிக்கும் தந்தாய் நீ வரமே




 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!