Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் எங்கள் சூசை தந்தை மாமுனியே  

எங்கள் சூசை தந்தை மாமுனியே
உங்கள் குடும்ப வாழ்வின் மாதிரியே
உந்தன் நேர்மையை போற்றுகிறோம்
உந்தன் எளிமையை நாடுகிறோம்
      போற்றி போற்றி தந்தையே
      எம்மைக் காக்கும் காவல் நீரே

லீலி மலராய் வாசம் தந்தாய்
குழந்தை இயேசுவைத் தாங்கி நின்றாய்
துன்பத்திலும் துயரத்திலும் எங்களுடனே நடந்தாய்
அன்னை மரியின் காவலனாய் ஆறுதல் நீ தந்தாய்
உழைப்புக்கு உறுதுணையானாய்
உறவுகளின் உறைவிடமானாய்
துணைநின்ற எங்கள் காவலரே
நின்புகழ் வாழியவே - 2
      போற்றி போற்றி தந்தையே
      எம்மைக் காக்கும் காவல் நீரே

நீதிக்கும் நேர்மைக்கும் மாதிரியே
இறை திருவுளத்தின் நாயகனே
வேதனையிலும்வருத்தத்திலும் எங்கள் ஆறுதலே
கனவுகளின் மன்னவனே கன்னி மரியின் துணையே
வளமை தந்த வள்ளலே
என்னும் வான் புகழ் உயர்ந்தவரே
பரிந்து பேசும் புனிதரே எம்மைக் காத்தருளும்
      போற்றி போற்றி தந்தையே
      எம்மைக் காக்கும் காவல் நீரே

 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!