புனித சூசையப்பர் | 1130-மாநிலம் போற்றிடும் மாவளனே |
மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே-2 புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த -2 முனிவரனே உம் பதம் பணிந்தோம் -2 உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ இறைவன் கையில் தவழ்வதனால் (2) மலை போல் எழும் துயர் வாழ்வினிலே -2 மறைந்ததுவே தாய்மரி துணையால் இறைவனின் பணிகள் செய்வதற்கு இரவும் நண் பகலும் உமக்கு மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு -2 மனத்திடம் தா உன் அடியவர்க்கு |