புனித சூசையப்பர் | 1129-மதுமலர் நிறைகொடி |
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறைசூசை மாமுனியே துதிவளர் உமது நற்பதம் வந்தோம் துணை செய்து எமையாளும் தாதையரே வானுலகிழந்ததால் கர்வமுற்ற வன்மனக் கூளியின் வலையறுக்க தான் மனுவாய் உதித்த கடவுள் தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த துளிநிகர் அருள்பொழி மாமரியாள் துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து ஆதிரையோரைக் கண் பார்த்துனது ஆசியை அளித்தருள் மாதவனே |