புனித சூசையப்பர் | 1128-பாவாலும் மனப் பூவாலும் |
பாவாலும் மனப் பூவாலும் சூசை தாதாவைத் துதிப்போம் பாதார திந்தம் தாள்ப் பணிந்து அவர் சீரோங்கிய பேராதாரம் பெறுவோம் பூவாழும் புண்ணிய பூமான்யாவரிலும் மேலான வரம் பூண்டவரை வேதாகமமே நீதிமானென முகவே மதிக்கும் மாதவரை ஆசைக் கடிமை யானோரெல்லாமதன் பாசத்தாலேதான் பாழடைவார் சூசைக்கடியார் அவரால் நித்ய சுகத்தையே பெறுவார் நிசமே வாசத் தண்மலர் சேர்க்கையின் தண்டமே வன்மையாகவே பூத்திலங்க மாசில்லாத மாமரியின் மணவாளனாக தகை பூண்டவரை |