புனித சூசையப்பர் | 1127-குழந்தை இயேசுவை |
குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தி காட்சியளித்திடும் சூசை முனியே கைகளைக் கொட்டி மங்களம் பாடி புகழ்ந்திட நாங்கள் கூடிவந்தோம் - 2 புனித சூசையை நாடி நின்றோம் தந்தையைப் போல அறிவினைக் கொடுத்து தாயினைப் போன்று அன்பினைக் காட்டி உற்ற நண்பனாய் ஊரில் தீபமாய் இந்த உலகத்தில் வந்திடும் வளனே மங்களம் சொல்லி கைகளைக் கொட்டி மாநிலம் எங்கும் உம் புகழ் சொல்வோம் - புகழ்ந்திட கன்னிமரியாளின் துணைவரும் நீரே இயேசு குழந்தையை வளர்த்தவர் நீரே உகந்த பிள்ளைகள் என்றெனச் சொல்லி ஊரென வந்தோம் உமையே புகழ்ந்தோம் மன்னர் கோத்திர மணிமுடி மைந்தா மாண்புடன் எம்மை மகிழ்வுடன் காப்பாய் |