Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனிதர் பாடல்கள்

புனித சூசையப்பர் 1126-ஓ எங்கள் நல்ல வளனாரே  

ஓ எங்கள் நல்ல வளனாரே
யேசுவை வளர்த்த தந்தையே
கண்கண்ட காவலன் நீரே
பார்போற்றும் மரிவளன் நீரே
சேய் உம்மை வாழ்த்த வந்தோம்
உம்மைப் போற்றி மகிழ்ந்து நின்றோம்

அமைதியின் பேரொளி நீரே
அன்புக்கு இலக்கணம் நீரே
மாமரி கணவர் நீரே
நேசமுள்ள மனிதர் நீரே
நீதியின் தூதரே
தீதில்லா முனிவரே

உழைப்பின் சிகரம் நீரே
தியாகத்தின் மறு உரு நீரே
திருச்சபையின் தூண் நீரே
திருக்குடும்பத்தின் தலைவர் நீரே
ஞானத்தின் சீலரே
வாய்மையின் புனிதரே
 

மரியன்னையே எங்கள் மாமரியே
மாபரன் இயேசுவின் தாய்மரியே!