புனித சூசையப்பர் | 1125-என்றும் நீர்துணை மாவளனே |
என்றும் நீர்துணை மாவளனே உன்னிடம்தான் எந்தன் புகலிடமே (2) மனதில் எல்லாம் உன் நினைவே நன்மைகளின் காவலனே வளனே வளனே மாவளனே வேண்டும் வரங்கள் தந்திடுவாய் (2) பேச்சினிலே வாய்மையையும் நெஞ்சினிலே தூய்மையையும் நீர் தந்தால் வாழ்ந்திடுவேன் (2) உண்மையில் வழியினில் நான் சென்று ஒவ்வொரு நொடியிலும் உழைத்திடுவேன் உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் -2 வளனே ... ... துன்பத்திலும் நீயிருப்பாய் தந்தையாய் நீ காத்திருப்பாய் இறையருள் யாவையும் பெற்றருள்வாய் (2) உன்னருள்தனிலே வாழ்ந்திருப்பேன் உன்கரம்தனிலே மகிழ்ந்திருப்பேன் உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே ... ... |