குழந்தை இயேசு பாடல்கள் | குழந்தை இயேசுவே நன்றி |
லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லல்லால்லா ஆகாகா ஆகாகா ஆகாகா ஆகாகா வாருங்கள் பக்தர்களே கூடி வாருங்கள் குழந்தை இயேசுவின் புகழைப் பாடுங்கள் தந்தை அன்பினால் நம்மைத் தேடியே வந்த குமரனைக் கொண்டாடுங்கள் திருத்தலம் வருவோரின் குறைகள் போக்கியே திருவருள் புரிபவனை தினம் பாடுங்கள் லலல்லலல்ல லலல்லலல்ல குழந்தையாய் வாழ்ந்திடவே அழைக்கும் என் தெய்வமே மழலை போல் கபடம் இன்றி வாழும் அருள் தாருமே உண்மையும் நன்மையும் இருவிழியாய் நிலைக்கணும் சொல்லிலும் செயலிலும் உன்னைப்போல் விளங்கணும் அன்பே ஆரமுதே என் செல்வமே இன்றே எழுந்தருளே என் நெஞ்சமே (2) குழந்தையே தெய்வமே உன்னை நான் போற்றுவேன் உன் மகிமை புகழ் பாட திருவருள் தினம் பொழியுமே உள்ளமும் இல்லமும் அமைதியாய் இருக்கணும் உலகெங்கும் உன் ஆட்சி நிலைத்திடவே உழைக்கணும் அன்பே ஆரமுதே என் செல்வமே இன்றே எழுந்தருளே என் நெஞ்சமே (2) |