குழந்தை இயேசு பாடல்கள் | குழந்தை இயேசுவே நன்றி |
ஆ.......ஆ.........ஆ......... சிறு குழந்தை போல நான் மாற வேண்டும் என் இயேசுவே (2) என்னைக் கரம் பிடித்து நடத்தும் தாய்போல் என்னை நடத்திடுமே என்னை நடத்திடுமே என் சிந்தையிலும் என் உள்ளத்திலும் நீ இருக்க வேண்டுமே - உம் சித்தப்படி என் வாழ்க்கையில் எல்லாம் நடக்க வேண்டுமே சிறு குழந்தை போல நான் மாற வேண்டும் என் இயேசுவே கவலையின்றி தன் அன்னை மடியில் தவழும் பிள்ளைபோல் என்னைக் கருவிலிருந்து காத்திடும் தெய்வமே உன்னுடன் இருக்கின்றேன் (2) கடலலைகள் போல் தொடர் துன்பங்கள் வந்து மோதும் வேளையிலே உன் கரங்கள் பிடித்து கனிவாய் அணைப்பது என் அன்புத் தெய்வமே சிறு குழந்தை போல நான் மாற வேண்டும் என் இயேசுவே கரங்கள் குவித்து கண்கள் மூடி ஜெபிக்கும் பிள்ளைபோல் - உன் கவலை மறந்து இறைவனை நினைத்து உன்னை மறந்து விடு (2) தினம் கலங்கித் தவிக்கும் மனிதனே நீ கடவுளின் பிள்ளைதான் நம்மைக் கண்ணின் மணிபோல் இறைவன் காப்பது என்றும் உண்மைதான் சிறு குழந்தை போல நான் மாற வேண்டும் என் இயேசுவே |