குழந்தை இயேசு பாடல்கள் | குழந்தை இயேசுவே அன்பின் |
குழந்தை இயேசுவே அன்பின் அரசே மகிமை நிறைந்தவா எங்கள் இதயம் உறைய வா வாழ்வில் தொடரும் பாரம் நிறைந்து பரிவாய் காத்திடுவாய் துணையாய் இருந்திடுவாய் உம்மை நாங்கள் மகிமை செய்ய எம்மை நீயும் மேன்மை செய்வாய் இருளின் பாதையில் ஒளியாய் வழியாய் வந்திடுவாய் இன்னல் நீங்கிட துணையாய் உறவாய் நின்றிடுவாய் கவலை கலக்கம் போக்கிடுவாய் கரத்தால் எம்மைத் தாங்கிடுவாய் - உம் கரத்தால் எம்மைத் தாங்கிடுவாய் உம்மை நாங்கள் மகிமை செய்ய எம்மை நீயும் மேன்மை செய்வாய் இரக்க செயல்களில் இறைவா உன் வழி தொடர்ந்திடவே இயங்கும் பணிகளில் எளியோர் துன்பம் துடைத்திடவே அற்புதம் அதிசயம் செய்திடுவாய் அனுதினம் எம்மை நடத்திடுவாய் அனுதினம் எம்மை நடத்திடுவாய் உம்மை நாங்கள் மகிமை செய்ய எம்மை நீயும் மேன்மை செய்வாய் |