குழந்தை இயேசு பாடல்கள் | குழந்தை யேசுவே எம் |
குழந்தை யேசுவே எம் கோவில் தெய்வமே குதூகலமாய் கூடி வந்து துதிகள் பாடினோம் உந்தன் அருளை நாடினோம் அற்புதம் அற்புதம் உந்தன் தரிசனம் பொற்பதம் உன்பாதம் எமக்கு தரிசனம் வானமும் பூமியாவுமே வணங்கும் நாமமே இயேசுவே இயேசுவே எங்கள் யோகமே புதியதோர் வானமும் புதிய பூமியும் புலர்வதை காட்டிட எழுந்த தீபமே வழமையின் பாவத்தில் வாழ்ந்து வாடினோம் புதுமையே புத்துயிர் எம்மை தேற்றும் வானவர் தந்தையின் வாஞ்சையானவா வாஞ்சையில் எங்களை நடத்த வந்தவா மாய உலகில் வஞ்சமும் வறுமையும் நோயும் எம்மையும் அன்பினின்று பிரிக்காதருளும் |