| மாதாபாடல்கள் | அன்னை மரியே தாயே |
|
அன்னை மரியே தாயே அன்பு மழையே நீயே அழகழகா காட்சி தருவாயே -ஒன் பட்டு மொகம் கண்ணில் பட்டா போதுமே நீ தொட்ட எடம் நந்தவனம் ஆகுமே ஒன்ன நினைக்கயில லேசா மனம் பேசுமே என் மனசுக்குள்ள மல்லியப்பூ வாசமே 1 அம்மா ஒன்ன பாக்கையில அழுக எல்லாம் மாறுதே சும்மா உன்ன தேடி வர சோகம் எல்லாம் தீருதே -2 ஏழை சனம் வாடுதே ஏங்கி ஒன்னத் தேடுதே - 2 கண்கலங்கி காத்திருந்த எங்க மனம் பாடுதே தாயின் மடி கூடுதே - 2 2 வெண்ணிலவே மண்மேலே வெளிச்சம் காட்ட எறங்கி வா கண்ணுக்குள்ளே என்ன வச்சு காக்கும் எங்க தாயம்மா -2 பாவி என்ன பாரம்மா வேற துணை யாரம்மா -2 உன் மடியில நான் சாயிறேன் மனசு ரொம்ப பாரமா -2 ஆறுதலே நீயம்மா-2 |