மாதாபாடல்கள் |
யாரிவளோ யாரிவளோ வைகறை போல் எழுந்து வரும் யார் இவள் திங்களைப்போல் அழகுடனே சூரியனை அணிந்து வரும் யாரிவள் ஊர் எதுவோ பேர் எதுவோ பாருக்குள்ளே பேர் விளங்கும் யாரிவள் பாலைவன நறுமணமாய் படை நடுங்க நடந்து வரும் யாரிவள் வெள்ளைப்புறா போல ஒரு பிள்ளை மனம் கொண்டவளோ யார் இவள் - தாய் இவள் மலைகளிலே துள்ளி வரும் கலை மான்கள் போல வரும் யார் இவள் - தாய் இவள் பரந்திருக்கும் பள்ளத்தாக்கில் படர்ந்திருக்கும் லீலி மலர் யாரிவள் - தாய் இவள் தலைமுறைகள் தலைமுறையாய் தாய் எனவே தலை வணங்கும் யாரிவள் - தாய் இவள் பூட்டப்பட்ட பூந்தோட்டம் யாரிவள் பொங்கி வரும் நீர் ஊற்றாம் யாரிவள் - தாய் இவள் பெண்களிலே பேறுடையாள் பேரழகின் பெட்டகமாம் யாரிவள் - தாய் இவள் காலையிலே துயிலெழுப்பும் காட்டுப்புறா போல் முழங்கும் யாரிவள்- தாய் இவள் தந்தையவர் மந்தைகளை நீர் அருகே நடத்தி வரும் யாரிவள் - தாய் இவள் தீர்ந்துபோன திராட்சைரசம் திரும்பிவர தீர்ப்பெழுதும் யாரிவள் - தாய் இவள் சாலமோனின் பஞ்சணையாம் யாரிவள் தாவீதின் கோபுரமாம் யாரிவள் - தாய் இவள் |