Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் வருவீர் இந்த ஜெபமாலை

வருவீர் இந்த ஜெபமாலை மறைபொருள் தியானித்து
மாதாவுடன் சேர்ந்து மைந்தனைப் புகழ்வோம்

மங்கள வார்த்தையைக் கேட்டாள் அன்னை
வேகமாய் ஓடிளாள் உறவைக்காண
உலகத்தின் மீட்பரை பெற்றிட்ட அன்னை
அவள் காணிக்கையாக்கிளாய் செல்லமகனை
கண்டெடுத்தாள் காணாத மகனை
வருவீர் இந்த சந்தோச மறைபொருள் தியானித்து
மாதாவுடன் சேர்ந்து மைந்தனைப் புகழ்வோம்

தண்ணீரால் யோர்டானில் திருமுழுக்குப்பெற்றார்
இயேசு கானானில் காண்பித்தார் தன்னை
விடுதலை நற்செய்தி அறிவித்தார் எங்கும்
மறுரூபமானார் தாபோர் மலையில்
தூயதாம் திருப்பலியை உருவாக்கினார்
வருவீர் இந்த ஒளிநிறை மறைபொருள் தியானித்து
மாதாவுடன் சேர்ந்து மைந்தனைப் புகழ்வோம்

இரத்தத்தின் வியர்வை விழுந்தது கெஸ்தமனையில்
கட்டுண்ட சவுக்காலே காயப்பட்டார்
வேதனை தந்திடும் முள்முடி சூடி
சிலுவையை சுமந்தார் வழிதனிலே
வினையாகி பலியீந்தார் தன் ஜீவனை
வருவீர் இந்த துக்கத்தின் மறைபொருள் தியானித்து
மாதாவுடன் சேர்ந்து மைந்தனை புகழ்வோம்


ஜெயக்கொடியுடனே உயிர்த்தெழுந்தார் -அவர்
விண்ணகம் சென்றார் நாற்பதாம் நாள்
தீயாய் தூய ஆவி இறங்கியே வந்தார்
விண்ணகம் ஏறினாள் மாதா மரியா
இராணியாய் கிரீடம் சூட்டினார் அன்னை
வருவீர் இந்த மகிமையின் மறைபொருள் தியானித்து
மாதாவுடன் சேர்ந்து மைந்தனை புகழ்வோம்





 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா