மாதாபாடல்கள் | உந்தன் பெயர் சொல்லி |
சொல்லச் செல்ல இனிக்குதம்மா உந்தன் பல கோடி பெயரம்மா அள்ள அள்ளக் குறையாதம்மா - உன் அற்புதங்களும் புதுமைகளும் அன்னை வேளாங்கன்னித் தாயே உன் பெயர் சொல்லி அழைக்கிறோம் உன் புதுமைகள் பாடி மகிழ்கிறோம் எங்கள் ஆரோக்கிய அன்னையே வாழ்க வாழ்க உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா உந்தன் புகழ் பாடி மகிழ்ந்தேனே அம்மா எத்தனை பெயரம்மா குறையாத கடலம்மா ஒவ்வொன்றும் உமதன்பை காட்டிடும் ஒளியம்மா அன்னை வேளாங்கன்னி என்று சொன்னால் போதும் இந்தப் பிறவிப்பலன்கள் நம்மை வந்து சேரும் பெண்களுள் சிறந்தவராய் பேறுகள் பெற்றீரே மங்கள மாதாவே உம் பாதம் பணிந்தோமே கன்னிமை குன்றாத ஏக நல் உத்தமியே மாசற்ற மாதாவே உம் பாதம் பணிந்தோமே ஆவியினாலே இயேசுவை உதரம் சுமந்தவளே தாழ்ச்சியின் மாதிரியாகவே உலகில் பிறந்தவரே கருத்தாங்கியமாதா ஆரோக்கியமாதா அற்புதமாதா அடைக்கல மாதா லூர்துமாதா பனிமயமாதா பூண்டி மாதா பூலோக மாதா மகிமைமாதா பாத்திமாமாதா சகாயமாதா அதிசயமாதா சொல்லச் சொல்ல இனிக்குதம்மா உந்தன் மாண்புகள் பெருகுதம்மா ஆழியின் கரையோரம் வீற்றிடும் பேரொளியே உன்னத மாதாவே உம் பாதம் பணிந்தோமே தாயென்று வருவோரை தாங்கிடும் திருமடியே பரிசுத்தமாதாவே உம் பாதம் பணிந்தோமே பாதை யாத்திரையாகவே நாங்கள் வந்தோமே உந்தன் கோவில் சேர்ந்ததும் ஏக்கம் தீர்ந்தோமே பெரிய நாயகி மாதா காணிக்கை மாதா மழைமலை மாதா உத்தரியமாதா சலேத்து மாதா உபகாரமாதா வியாகுல மாதா கார்மேல் மாதா விண்ணரசி மாதா ஜெபமாலை மாதா துன்ப முடிச்சுக்கள் அவிழ்த்திடும் மாதா சொல்லச் சொல்ல இனிக்குதம்மா உந்தன் மாண்புகள் பெருகுதம்மா உந்தன் பெயர் சொல்லி அழைத்தேனே அம்மா உந்தன் புகழ் பாடி மகிழ்வேன் அம்மா |