மாதாபாடல்கள் | சதா சகாயத்தாயே |
சதா சகாயத்தாயே சகல மைந்தர்க்குமே இதய உணர்ச்சி ததும்பும் உனையே தினம் நினைந்தாலே உதயத் தாரகை இருளில் நீயென உலகம் கூறிடுமே (2) பதமும் அடைந்தோர் பாவமும் களைவர் பரமநாயகியே பயமும் கவலை தீர் புதுமை அன்னையும் நீர் நயமும் பெருகும் துணையும் நீயென நிதம் புகழ்வோமே புதுமை தாரகை புரிந்தாய் பூவிலே புனித மாமரியே சுதனும் உனையே தாயென அளித்தார் சிலுவையடியிலே பயமும் கவலை தீர் புதுமை அன்னையும் நீர் நயமும் பெருகும் துணையும் நீயென நிதம் புகழ்வோமே |