மாதாபாடல்கள் | தூய ஜெபமாலை அன்னையின் மன்றாட்டுமாலை |
ஆண்டவரே இரக்கமாயிரும்(2) கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2) ஆண்டவரே இரக்கமாயிரும்(2) கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் விண்ணகத் தந்தையே எம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதன் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய ஆவியாம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் தூய்மை நிறைந்த நம் இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - கபிரியேல் தூதரால் வாழ்த்துப் பெற்ற அருள் நிறை மாமரியே - இறைவனின் தாயென எலிசபேத்தால் புகழ் பெற்ற மாமரியே - செபமாலை புகழ்வது நலமானது வரம் பெற்ற மாமரியே - பொனவெந்தூராலே பறைசாற்றப் பெற்ற தெய்வீகத் தாய் மரியே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - உத்தம ஜெபத்தின் நன்மைகளை தெரிந்திடும் மாமரியே - விண்ணுலகோர்க்கு உவப்பாக விளங்கிடும் மாமரியே - இறையினத்திற்குஉகந்ததுமான தியானத்தின் மாமரியே - தாவீதின் வீணைபோல் இசைகின்ற ஜெபத்தின் மாமரியே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நூற்ரைம்பதொரு ராகங்களாய் ஒலித்திடும் மாமரியே நூற்ரைம்பதொரு மணிகளிலே மகிமையாய்த் திகழ்பவளே இஸ்ரவேல்களின்மேல் கேடயமாய் விளங்கிடும் மாமரியே பக்தியுள்ளோரின் ஞானமென ஒளிர்ந்திடும் பேரெளிலே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஜெபமாலை கொண்டே பகைவர்களை வென்றிட்ட தாய்மரியே புனித .....இதயத்திலே மொழிந்திட்ட மாமரியே ஜெபமாலை செய்வோரின் வாழ்வினிலே புதுமைகள் செய்பவளே பக்தியாய் ஜெபமாலை ஜெபிப்போர்க்கு அருளிடும் திருக்கரமே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் விண்ணுலக வாழ்வின் ஏணியுமாய் ஜெபத்தினைக் கொடுத்தவளே இறைவனில் இணையும் ஜெபமாலை திருவழி என்றவளே துறவியர் ஜெபமாலை ஜெபிப்பதனால் ஆதரவு தருபவளே ஜெபமாலை ஜெபித்திடும் குடும்பங்களில் பரிபலன் தருபவளே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நிலையான ஜெபத்தின் தியாகங்களை ஏந்திடும் தூபமே விசுவாசிகளுடைய ......நல்வழி காட்டிடுவீர் எல்லா நன்மைகளின் ஊற்றாக விளங்கிடும் தாய்மரியே மறைபொருளெல்லாம் நிறைவாய்க் கொள்ளும் உத்தம நாயகியே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மனிதரனைவரின் மணிமுடியாக விளங்கிடும் மாமரியே தீராத நோயில் தவிப்போர்க்கு சுகங்களைத் தருபவளே தேவரகசியங்கள் கொண்டிலங்கும் செபமாலை தாய்மரியே அருங்குணத்தின் பாதுகாவலாய் பரிந்துரை செய்பவளே - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - புனித செபமாலை அன்னையே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் - உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் பாவங்களைப் பொறுத்ருளும் - உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் -- உலகின் பாவங்கள் போக்குகின்ற இறைவனின் செம்மறியே எங்கள் மேல் இரக்கமாயிரும் எங்கள் மேல் இரக்கமாயிரும் எங்கள் மேல் இரக்கமாயிரும் |