Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் பிரார்த்தனை 2

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி தயவாயிரும்
கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்
கிறிஸ்துவே நன்றாய் கேட்டருளும்

விண்ணகத் தந்தை இறைவனே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
தூய ஆவி இறைவனே
எங்கள்மேல் இரக்கமாயிரும்
எங்கள்மேல் இரக்கமாயிரும்

எங்கள் புனித மாமரியே
இறைவன் புனித மாதாவே
கன்னியரில் உத்தம கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே
மகா பரிசுத்த மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

அத்தியந்த விரத்தி மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
கன்னி தூய்மை கெடா மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பேரன்பிற்குரிய மாதாவே
ஆச்சரியத்துக்குரிய மாதாவே
நல்ல ஆலோசனை மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சிருஷ்டிகருடைய மாதாவே
மகா புத்தியுள்ள கன்னிகையே
வணக்கத்திற்குரிய கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சிருஸ்ரிகருடைய கன்னிகையே
சக்தியுடைத்தான கன்னிகையே
தயை மிகுந்த கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விசுவாசியான கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்தின் நல்ல பிறப்பிடமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள் மகிழ்ச்சின் காரணமே
அத்தியந்த பக்தியுள்ள பாத்திரமே
மறைபொருள்ரோஜா புஸ்பமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தாவீது ராஜாவின் உப்பரிகையே
தந்த மயமான உப்பரிகையே
சொர்ன மயமான ஆலயமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வாக்குத்தத்தின் நல் பெட்டகமே
பரலோகத்தின் வாசலே
விடியற்காலத்தின் நட்சத்திரமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
துன்பப்படுவோரின் தேற்றரவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுக்களின் ராக்கினியே
பிதா பிதாக்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

இறைவாக்கினர்களின் ராக்கினியே
அப்போஸ்தலர்களின் ராக்கினியே
மறைசாட்சிகளின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஸ்துதியர்களின் ராக்கினியே
கன்னியருடைய ராக்கினியே
அனைத்துப் புனிதர்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பரலோக ஆரோபண ராக்கினியே
திருச்செபமாலையின் ராக்கினியே
சமாதானத்தின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

எங்கள் குடும்த்தின் ராக்கினியே
அருள்மழை பொழியும் தாய்மரியே
ஆரோக்கிய அன்னை மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் உத்தம செம்மறியே
குழு: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் 2

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் உத்தம செம்மறியே
குழு: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 2

உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் உத்தம செம்மறியே
குழு: எம்மேல் இரக்கமாயிரும் 2

இயேசுக்கிறீஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படி
இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஜெபிப்போமாக:
இறைவனுடைய புனித மாதாவே! இதோ உம்முடைய சரணமாக ஓடிவந்தோம். எங்கள் அவசரங்களிலே நாங்கள் வேண்டிக்
கொள்கிறதற்கு பாராமுகமாய் இராதேயும். ஆசீர்வதிக்கப்பட்டவளுமாய் மோட்சமகிமையுடைத்தவளுமாய் இருக்கிற நித்திய கன்னிகையே! சகல ஆபத்துக்களிலேயும் நின்று எங்களைக் காத்தருளும் ஆமேன்.

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா