Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் பிரார்த்தனை 3

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும்
கிறிஸ்துவே தயவாய் கேட்டருளும்

விண்ணகத் தந்தை பிதாவே
உலகத்தை மீட்ட சுதன் தேவா
பரிசுத்த ஆவி இறைவனே
எம்மேல் இரக்கம் வைத்தருளும்

புனிதம் நிறைந்த மாமரியே
இறைவனின் புனித மாதாவே
கன்னியரில் உயர் கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கிறிஸ்துவை ஈன்ற மாதாவே
திருச்சபையோரின் மாதாவே
திருவருட்கொடைகளின் மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மாகா பரிசுத்த மாதாவே
பழுதற்ற கன்னி மாதாவே
மாசற்ற கன்னி மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

கன்னிமை வழுவா மாதாவே
பேரன்பிற்குரிய மாதாவே
பெரும்வியப்பான மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

நல்ல ஆலோசனை மாதாவே
சிருஷ்டிகருடைய மாதாவே
எங்கள் மீட்பரின் மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்சபையினுடைய மாதாவே
வணக்கத்திற்குரிய மாதாவே
துதிகளுக்குரிய மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

சக்திமிகுந்த கன்னிகையே
இறக்கமிகுந்த கன்னிகையே
விசுவாசியான கன்னிகையே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்தின் நல்ல பிறப்பிடமே
எங்கள் மகிழ்வின் காரணமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

ஞானம் மிகுந்த பாத்திரமே
மகிமை விளங்கும் பாத்திரமே
உன்னத பக்தியின் பாத்திரமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைபொருளான ரோஜாவே
தாவீது அரசரின் கோபுரமே
தந்த மயமான கோபுரமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

தங்க மயமான ஆலயமே
வாக்குத்தத்தின் நல் பெட்டகமே
வானக எழில்மிகு வாசலே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

விடியற்காலத்தின் விண்மீனே
வியாதியுற்றோருக்கு ஆரோக்கியமே
பாவிகள் யாவர்க்கும் அடைக்கலமே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

துண்புறுவோருக்கு தேற்றரவே
கிறிஸ்தவருடைய சகாயமே
சம்மனசுக்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

பிதா பிதாக்களின் ராக்கினியே
தீர்க்க-தரிசிகளின் ராக்கினியே
அப்போஸ்தலர்களின் ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

மறைசாட்சியரின் ராக்கினியே
துதியர்களுடைய ராக்கினியே
கன்னியருடைய ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனிதர்களுடைய ராக்கினியே
பிறவிபாவமற்ற ராக்கினியே
விண்ணேற்படைந்த ராக்கினியே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

திருச்செபமாலையின் ராக்கினியே
சமாதானத்தின் ராக்கினியே
புனித ஆரோக்கிய மாதாவே
குழு: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

உலகின் பாவங்களைப் போக்கும் உத்தம இறைவனின் செம்மறியே-3
குழு: எங்கள் பாவங்கள் பொறுத்தருளும் 2
குழு: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் 2
குழு: எம்மேல் இரக்கம் வைத்தருளும் 2






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா