மாதாபாடல்கள் | பெனு நகர் பதியினில் |
பெனு நகர் பதியினில் கருணை பொழியும் தாயே, மங்கலமே மாணிக்கமே நின் பதமே தேடி வருவோர்க்கே வரம் கொடுப்பவளே தேவனின் சாரோனின் ரோஜாவே மடுத்தாயே எங்கள் மடுத்தாயே, மடுவினிலே காட்சி தந்த மடுத்தாயே (நீர் வாழ்க மடுத்தாயே நீர் வாழ்க - 2) கருணையின் கடலான எம் தாயே, காவியத்தின் பேரழகே நீர் தானே படைத்தவனின் பரம் பொருள் தாயே நீரே, பாடு பட்டோரை கரையேற்றும் தூயே, கூவிடும் கூக்குரல் கேட்டிடுவீரே - எம், தேவைகள் தீர்த்திடும் தேவனின் தாயே, வாழ்வெலாம் இழந்தே உனை வேண்டி நிற்கின்றோம் மடுத்தாயே மடுவினில் பூத்த அல்லிமலரே முழு நிலவின் ஒளியே உந்தன் முகமே புலம் பெயர்ந்து உறவிழந்து நாடிழந்து வாடுகின்றோம் ஏந்திடும் கைகளால் ஏந்திடுவீரே, நெஞ்சினில் ஈரம் கொண்ட எம் தாயே வாழ்வெலாம் இழந்தே உனைவேண்டி நிற்கின்றோம் மடுத்தாயே |