மாதாபாடல்கள் | மாறா அழகே தாய்மரி |
மாறா அழகே தாய்மரி குறையா அன்பே நீ முழுமதி-2 உள்ளம் உன்னைத் தேடி வந்ததே உன்னைக் கண்டு அன்பில் துள்ளுதே -2 விழிகளிலே பால்நிலா தினந்தோறும் திருவிழா கானாவூர் புதுமை அதன் காரணம் நீயம்மா தூய்மையான உள்ளம் நீ தேவன் வாழும் இல்லம் கைஏந்தி வந்தோம் எம் குறைகேளுமம்மா தேவன் வாழும் இல்லம் நீ தேடிவந்த செல்வம் காணாத இயேசுவையையே தேடி அலைந்தாயே அம்மா தேடிவரும் எம்மையும் பாவையே கண்பாரும் விண்ணில் வாழும் உம்மிலே அன்பு கொள்ள மெல்ல மெல்ல சொர்க்க வாசல் திறக்குதே இரவோடு இரவாய் நீ பாலகனைக் காத்தாய் இரவுநேர வழியில் மன இருளின் வெளிச்சம் நீயே ஏரோதின் வாளை இறையருளாலே சாய்த்தாய் அருள்நிறைந்த மரியே நீ இறைவன் தந்த வழியே கல்வாரி மலைமீது நெஞ்சம் தவித்தாயே அம்மா தேவனவன் அருட்கரம் பூவுலகின் அடைக்கலம் கோடி மின்னல் மின்னுதே உந்தன் புகழைச் சொல்ல சொல்ல உம்மில் எங்கும் பூக்குதே( மாறா அழகே ) |