மாதாபாடல்கள் | மங்களம் மங்களம் |
மங்களம் மங்களம் மாமரியே மங்களம் மங்களம் - சுப மங்களம் - ஜெய மங்களம் - தின மங்களம் மங்களம் திருவருள் நிறைந்திலங்கும் நங்கையே மங்கையற்குள் மாண்பு மிக்க அங்கனையே மங்களம் திங்களைத் திருவடிக்குள் தீண்டி நின்றாய் மங்களம் செங்கரதிர்த்தி வாகரனைத் தேர்பணிந்தாய் மங்களம் செங்கைமேலே இயேசு பாலன் தேர்ந்த தாயே மங்களம் திங்கரர்க்கு கங்கை நீயே கிருபை செய்வாய் அமலி நீயே தினமும் தாயே அகமகிழ்ந்தாய் மங்களம் கமலபாதம் தாள்பணிந்தோம் கருணைசெய்வாய் மங்களம் கிறீஸதவர் சகாயை என்று கீர்த்தி பெற்றாய் மங்களம் அண்டி வந்தோம் அனைவருக்கும் அருள் பொழிவாய் மங்களம் |