Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

 மாதாபாடல்கள் -இதயம் மகிழுதம்மா  

இதயம் மகிழுதம்மா - துயர்
கறைகள் மறையுதம்மா
உள்ளமும் துள்ளுதம்மா - உந்தன்
தாய்மையின் நினைவாலே அம்மா

தாயெனும் போதினிலே - மனம்
தானுன்னைத் தேடுதம்மா - 2
ஈன்ற தாயும் போற்றும் உந்தன்
பாதம் பணிந்திடுவேன் அம்மா

வாழ்வெனும் பாதையிலே - ஒளி
விளக்காய் நீ இருப்பாய் - 2
உண்மை மனதும் உயர்ந்த நெறியும்
நிறைந்து வாழ்ந்திடுவேன் அம்மா

அன்னையுன் அன்பினிலே - என்றும்
அடைக்கலம் தாருமம்மா
நாளும் பொழுதும் உந்தன் நாமம்
பாடிப் புகழ்ந்திடுவேன்
 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா