Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

 மாதாபாடல்கள் அற்புதமே அமல உற்பவமே  
மாசில்லாக்கன்னியே மாந்தருள் அன்னையே
மரியே நீ வாழ்க.......
அமல அன்னையே நீ வாழ்க.......

நீசா நிசாநி சாகாரிசா (2)
அற்புதமே அமல உற்பவமே - உன்
பொற்பதமே அன்பின் அதிசயமே

அமலனை ஈன்ற அன்னையே
அகிலத்தை ஆளும் அரசியே
அமலியே வாழ்க அமுதமே வாழ்க
தரணியர் வாழ்த்தும் தாயே நீ வாழ்க

இறைவன் கரத்தில் வரைந்த ஓவியம் நீ - ஓவியம் நீ
இயேசுவைக் கருவில் சுமந்த பேதையும் நீ - பேதையும் நீ
அறியாத மாந்தரை அறியச் செய்தாய்
மலராத நம்பிக்கை மலரச் செய்தாய்
தூய்மை லீலிலியே துணை நல்கும் மலரே தூயவளே வாழ்க

அளவில்லா அன்பை அள்ளித் தந்தவள் நீ - தந்தவள் நீ
அமலனின் பெற்றுக் கொடுத்தவள் நீ - கொடுத்தவள் நீ
புரிரான துன்பத்தை உதிரவைத்தாய்
உணராத உறவினை உணரவைத்தாய்
மாசில்லாக் கன்னியே மாந்தரின் அன்னையே மரியே நீ வாழ்க



 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா