மாதாபாடல்கள் | -அம்மா அமுதினும் இனியவளே |
அம்மா அமுதினும் இனியவளே அமலியாய் உதித்தவளே அகமே மகிழ்வாய் மரியே தேவனாம் ஆண்டவரை பூவினில் ஈன்றவளே அருளிலே உறைந்தவளே அடியவர் நாவில் நிறைந்தவளே அமலியாய் அவதரித்தாய் அலகையின் தலை மிதித்தாய் அவனியிலே அருள் பொழிவாய் அடியவர் தாயாய் அமைந்திடுவாய் இறைவனின் எழிலரசி மறையவர் அருளரசி இதயமெல்லாம் மனமொழியாய் புகழ்ந்திடும் தூய வானரசி |