Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் விண்ணகமே இறங்கி வருமே
விண்ணகமே இறங்கி வருமே
அம்மா உந்தன் பரிந்துரையால்
மண்ணகமே மகிழ்ந்திடுமே
அம்மா உந்தன் அருள் மழையால்

எங்கள் மகிழ்ச்சியின் காரணம் நீ
எங்கள் மனங்களின் தாரகை நீ
எங்கள் இதழ்களில் பாடல் நீ
எங்கள் நினைவினில் இனிமை நீ

இறைவனின் திட்டம் உன்னில் நிறைவேற
இதோ உம் அடிமை என்றாயே
தூரத்தில் இருந்த தூய நல் தேவனை
அருகினில் வாழ்த்திட அழைத்து வந்தாய்
இனி திருநாளே என் வாழ்வே உன் அருளாலே

உன் வாழ்வே நம்பிக்கை பயணமல்லோ
உன் வழித்துணையே சுகமல்லோ
ஞானிகள் வணங்கிட மீட்பரை தந்தாய் நீ
ஞானத்தின் தேவன் ஆலயமே
புது வழி காட்டும் விண்மீனை வாழ்த்துகிறோம்






 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா