Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் விடியற்காலத்தின் நட்சத்திரமே
விடியற்காலத்தின் நட்சத்திரமே
விடியுமென்னும் எங்கள் நம்பிக்கையே -2
மரியே வாழிய வாழியவே
எம்மை நீ என்றுமே ஆதரியே -2

கன்னிமையில் விண்ணவனை பெற்றெடுத்தாய்
விடிந்ததே மரியே வாழி
கண்மணியாம் அம்மகனை கொடுத்தாய்
விடிந்ததே மரியே வாழி
தண்ணீரை இரசமாக்க ஜெபித்தாய்
கல்யாணம் நடந்தேறச் செய்தாய் -2
மரியே வாழ்க மரியே வாழ்க வாழிய வாழியவே -2

இல்லையெனும் சொல்லறியா வல்லவனின் தாயே
மரியே வாழி
சொல்லொன்றே போதுமம்மா எம் குறைகள் தீரும்
மரியே வாழி
அவர் சொல்வதெல்லாம் செய்து
அவனியில் உயர்ந்திட அருளும் -2
மரியே வாழ்க மரியே வாழ்க வாழிய வாழியவே -2









 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா