மாதாபாடல்கள் | வெற்றி தரும் ஜெபமாலை |
வெற்றி தரும் ஜெபமாலை - அன்னை கற்று தந்த ஜெபமாலை -2 ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை ஜெபிப்போம் துதிப்போம் துதிப்போம் துயர் நீங்க துதிப்போம் - 2 பரலோகத்தில் இருக்கும் நமது தந்தையை தொழுது தொடங்கும் ஜெபமாலை - அவள் பரிவுடன் நம்மை மீட்டருள் புரியும் மறையுரையே ஜெபமாலை - 2 அருள்நிறை மரியே அருள்நிறை மரியே என்று வேண்டும் ஜெபமாலை - 2 பிள்ளை குரல்கேட்டு அன்னை விரைந்து வந்து அரவணைக்க செய்யும் ஜெபமாலை - 2 மூவோர் இறைவனை மீண்டும் மீண்டுமாய் துதித்து துலங்கும் ஜெபமாலை - இங்கு யாவரும் வேண்டும் அமைதியும் அன்பும் தந்திடுமே ஜெபமாலை - 2 அறிந்தும் அறியாது புரிந்த பாவப் பரிகாரம் செய்யும் ஜெபமாலை - 2 நாம் விசுவாசத்தோடு வளர்ந்தோங்கி வாழ்வு பரிசடையச் செய்யும் ஜெபமாலை - 2 |