மாதாபாடல்கள் | வேளை நகரில் வீற்றிருக்கும் |
வேளை நகரில் வீற்றிருக்கும் எங்கள் ஆரோக்கிய தாய் நீ வாழ்க அரேபிய அன்னையாய் எங்களின் பாதுகாவல் நீ வாழ்க வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க பாலை நிலம் நாடி வாழ்வில் பொருள் தேடி மாந்தர் எம் பயண வேளையில் பாதை வழிகாட்டி வாழ்வில் ஒளியூட்டி அனுதினம் நீ காத்திட்டாய் பார் உலகத்தின் அன்னையே பாடி புகழ்கின்றோம் உம்மையே அன்பின் உருவே அருளின் நிறைவே கருணை மழையே கன்னித்தாயே -- வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க துன்ப துயர் சூழ்ந்து பாதம் தடுமாறி உம்மை நோக்கிடும் வேளையில் உறவாய் உடன் வந்து வலிமை வளம் சேர்த்து சேயாய் எமை நீ காத்திட்டாய் பார் உலகத்தின் அன்னையே பாடி புகழ்கின்றோம் உம்மையே அகிலம் ஆளும் அன்னை மரியே அன்பே அமுதே ஆரோக்கிய தாயே -- வாழ்க மரியே வாழ்க வாழ்க மரியே வாழ்க |