மாதாபாடல்கள் | வருகை அருள்வாயே |
வருகை அருள்வாயே - எம் திருக்குமரனின் தாயே சரணம் நீ தரவேண்டும் - நீ தரும் இப் புனித ஆண்டில் கானகம் வாழும் முக்கின் நீயே மடுத்தாயே கருணைக்கண் விழிகொண்டு என்றென்றும் காப்பாய் வானகத்தரசி நீ வாழ்த்தினோம் நாவாலே வணங்கி நின்றோம் அம்மா இன்னிசைப் பாவாலே பக்தியின் பாதை உன் மக்கட்கு காட்டிடுவாய் சக்தியே நானென்று தீயை நீ மூட்டிடுவாய் முக்தியேதும் வித்தை நெஞ்சத்தில் ஆழ்த்திடுவாய் நித்தியமும் உந்தன் தாய் கரம் நீட்டிடுவாய் சாந்தியின் அழைப்பினில் இறைவனும் திருச்சபையும் மாந்தரும் ஒப்புரவாகவே வாழ்ந்திடும் காந்த விசுவாசமுடன் என்றும் அருமலர்ச்சியை ஈந்திட்டாய் இறைஞ்சினோம் இதயங்கள் ஒன்றாக |