மாதாபாடல்கள் | வரமாக வந்தாயே தாயே |
மாதாவே மடுமாதாவே எம்மைக் காக்கும் தாய்மரியே நீ வாழ்க.. ஆ...ஆ....ஆ...ஆ... வரமாக வந்தாயே தாயே - நான் சுரம் மீட்டிப் பாடுவேன் உனையே அருளாட்சி நிறையும் அருளோசை கேட்கும் ஆலயம் வந்து நான் மகிழ்ந்திடுவேன் (2) மரியே வாழ்க..... மரியே வாழ்க ..... ஆவே...... மரியா ஆவே....... மரியா ஆ.....ஆ.....ஆ......(2) சிரம் தாழ்த்தி வணங்குவேன் தாயே சிரித்த உன் முகம் பார்த்து மகிழ்வேன் அருள்மாரி பொழியும் உன் தரிசனத்தில் தானாக பறந்தோடும் துன்பமெல்லாம் (2) மரியே வாழ்க..... மரியே வாழ்க ..... ஆவே...... மரியா ஆவே....... மரியா செபமாலை பரிசொன்று தந்தாய் - உன் பாசத்தின் சின்னமாய் எனக்கு பாவத்தின் திசைதனைத் தவிர்த்து விண்ணகப் பாதையில் நடந்திட அருள்புரிவாய் (2) மரியே வாழ்க..... மரியே வாழ்க ..... ஆவே...... மரியா ஆவே....... மரியா ஆ.....ஆ.....ஆ......(2) துணைவேந்தர் சுகவாழ்வு சுரக்கும் உனைப்பாட உறவொன்று பிறக்கும் ஆ.....ஆ.....ஆ......(2) புவிதேட புதுமைகள் நடக்கும் ஆ.....ஆ.....ஆ......(2) உன் சொல் கேட்க விண்ணகமே திறக்கும் (2) மரியே வாழ்க..... மரியே வாழ்க ..... ஆவே...... மரியா ஆவே....... மரியா |