மாதாபாடல்கள் | வானோரின் ராக்கினியே |
வானோரின் ராக்கினியே இயேசு ராஜனின் தாய் மாறியே விண்ணுக்கும் மண்ணுக்கும் ராக்கினியே எங்களை தாங்கி விடும் தாய் மரியே பிறந்தநாள் உமக்கு பிறந்தநாள் மலர்ந்த நாள் இம்மண்ணில் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் எட்டாம் நாள் தாயின் பிறந்தநாள். பாவம் கலைந்த நாள் என் தாயே நீ மீண்டும் மீண்டும் இம்மண்ணில் பிறக்க வேண்டும். என் நெஞ்சில் வாடும் வேதனைகள் முழுவதும் ஒழிந்திட வேண்டும். கண்ணீர் வடிக்கும் போது நான் நான் கண்ணீர் வடிக்கும் போதெல்லாம் உன் மகனை எனக்கு தர வேண்டும் - 2 இவ்வுலகத்தில் எத்தனையோ பெண்கள் பிறந்ததுண்டு உன் பிறப்பு தான் இம் மண்ணிலே வேதமீட்பை விதைத்தது. தாயுன் அன்பை உணர்ந்திட உம்மைப்போல பணிந்திட என் இதயம் மீண்டும் திறக்கனும் தாயுன் அன்பை உணர்ந்திட என் இதயம் மீண்டும் திறக்கனும் |