Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் வண்ண வண்ண லீலிமலர்
அன்னையாய் அருளமுதாய்
நல் ஆசானாய்....
அருமருந்தாய்...
விண்ணவர்க்கரசியாய்....
மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய்....
மாசிலா கன்னியாய்...
கரத்தனை ஈன்ற தவமே.....
தவத்தின் உருப்பயனே....
என் தாயான அம்மா...
தாயான அம்மா....


வண்ண வண்ண லீலிமலர்
அன்னைமரி நீயே ஆரோக்கியத்தாயே
கன்னல் சுவை தேனமுதே
கன்னிமரியாயே
கன்னிமரியாயே... (2)

தன்னை இந்த புவிக்களித்த இறைவன்
திருமகன் உன்னை தாயாக
ஆசி தந்தான் தான் பிறக்கும் முன்னே - (2)

வண்ண வண்ண.......


அள்ள அள்ளக் குறையாத ஆழியம்மா
உனதுள்ளம் தெள்ளுதமிழ் காவியமாய்
தித்திக்கும் கருணை வெள்ளம் - (2)
வள்ளல் அம்மா எங்களையே
வாழவைக்கும் தாய் அம்மா
எல்லையில்லா பேரின்பத்தின்
எழில்வாசல் திருவிளக்கே - (2)

வண்ண வண்ண.......

தாளாத நோய்க்கொடுமைக்
காளாகித் தவித்து நின்றோம்
கோடான கோடி மக்கள்
குறைகளை தீர்ப்பவளே - (2)
வேளாங்கண்ணி அமர்ந்த
வேதாநாயகன் தாயே
ஆதாரம் நீர் துணையை
ஆரோக்கிய மாமரியே -(2)







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா