மாதாபாடல்கள் | வணக்கமாதம் இது வணக்கமாதம் |
வணக்கமாதம் இது வணக்கமாதம் பேறு கொண்ட நல் வணக்க மாதம் மாபரனை ஈன்றவரை மகிமை நிறைந்த மாபரனை போற்றிப்பாட ஒரு வாய்ப்புத் தேடும் உள்ளங்கள் நிறையும் தூய மாதம் வாழ்க வாழ்க மரியே எங்கள் ஏழைகள் தாயே வாழியவே ஒவ்வொரு தினமாய் முப்பது நாளும் ஒற்றுமையோடு வந்தோமம்மா (2) கைகளில் வண்ண பூக்களைக் கொண்டு உம் திருப்பாதம் சேர்த்தோமம்மா எம் நெஞ்சங்கள் நெகிழ்கின்றதே எங்கும் அமைதி பெருகிடுதே உம் மனம் போல நல் உதவிகளைச் செய்திடும் நெஞ்சம் தாருமம்மா (2) மறுமொழியின்றி இறைவனின் வாக்கை பணிந்திடும் மாண்பை பொழியுமம்மா உன் உயர்வின் இராக்கினியே செபமாலை செபித்திடுவோம் வாழ்க வாழ்க மரியே எங்கள் ஏழைகள் தாயே வாழியவே |