மாதாபாடல்கள் | வானக அரசியே |
வானக அரசியே எங்கள் அன்னையே மானிடர் போற்றிடும் தேவ அன்னையே விடியல் தந்திடும் விண்மீன் நீயம்மா அருளை பொழிந்திடும் அன்பு தாயம்மா இறைவனின் அன்பை இதயத்தில் சுமந்தாய் இயேசுவின் தாயாய் உலகினில் வந்தாய் வாழ்வை தந்தவள் நீயம்மா வழியை சொன்னவன் நீயம்மா வளமை கொண்டவள் நீயம்மா பகிர்ந்தளிப்பவள் நீயம்மா வருந்திடும் நெஞ்சங்களை அணைத்துக் கொள்பவள் நீயம்மா எளிய உன் வாழ்வால் இறைவனை கவர்ந்தாய் தாழ்நிலை நின்று உயர்வினை அடைந்தாய் துணிவு கொண்டவள் நீயம்மா உறுதி கொண்டவள் நீயம்மா கருணை கொண்டவள நீயம்மா துணை இருப்பவள் நீயம்மா நானிலம் முழுதுமே நன்மை செய்பவள் நீயம்மா |