Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் வாழ்க மரி வாழ்கவென்று

வாழ்க மரி வாழ்கவென்று வாழ்த்திப் பாடுங்க
வேளாங்கன்னி மாதாவுக்கு ஈடு யாருங்க
உச்சி மீது கையை வைத்து உள்ளம் மீது ஆசை தந்து
நன்மை செய்யும் தாயைப் போல யாரு உண்டுங்க

வேளை நகர் ஆட்சியிலே அன்பு தானே பொருளுங்க
சாலையெல்லாம் கூடி வரும் மக்கள் தானே இவங்க
ஆலயத்தில் பக்தியுண்டு காணும் பொருள் காட்டுங்க
ஆளுபேதம் இல்லேங்க வேறுபாடு எங்கேங்க
எங்கேங்க எங்கேங்க எங்கேங்க எங்கேங்க

நானிலத்தில் யாருமில்லை தாயைப்போல பாருங்க
நாசவேலைக் காலத்திலே தடுப்புச் சுவர் தாயுங்க
நாளை மரியாதை எல்லாம் உய்ய வேணும் சரிங்க
தூயமனம் தானுங்க அன்னை கேட்கும் சீதணங்க
சீதணங்க சீதணங்க சீதணங்க சீதணங்க




 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா