மாதாபாடல்கள் | துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் |
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே துன்ப முடிச்சுகளால் வருந்தும் என்னையே உந்தன் மடியினில் என்னைத:தாங்கிக் கொள்வாயே உன் மகனிடம் நீயே எனக்குப் பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே திரு மகனிடம் நீயே எனக்குப் பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே கானாவூரில் திருமண வீட்டாரின் கண்ணீரை களைந்திட மகனிடம் பரிந்துரைத்தாயே மீளாத்துயரில் மூழ்கிடும் ஏழை என் கண்ணீரை துடைத்திட விரைந்திங்கு நீவருவாயே அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை ஆகட்டும் என்ற தாயே உன்னை நம்பி வந்தேனே தாழம்பூரில் தாயே கோவில் நீ கொண்டாயே உன் பாதம் வருவோரின் ஜெபம் கேட்பாயே - உடல் நலனும் திருமண வரனும் குழந்தைச் செல்வம் கேட்போரின் வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தருவாயே அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை ஆகட்டும் என்ற தாயே உன்னை நம்பி வந்தேனே |