Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் தேவதாயைப்போற்றி புகழ்ந்திடுவோம்
தேவதாயைப் போற்றி புகழ்ந்திடுவோம் - நம்
தேவையறிந்து உதவிகள் செய்திடும்

பாவிகளின் தஞ்சமே உன்னைத்தேடி வந்தோமே
பாருலக தேவதூதர் பெற்ற அன்னையே
நம்பி வந்தால் கைவிடாது நன்மை யாவும் செய்திடுவார்
ஞானம் நிறை அன்னையுன்னை அண்டினோரைக் கைவிடாதீர்

கன்னிமரி தாயே என்னைக் கருவிழி போலக் காத்து
எண்ணிலாத துன்பங்களைப் போக்க வருவாய்
ஊடல் மனம் எண்ணமென்று பாவங்களைச் செய்து வந்தோம்
படிந்திடும் பாவ நிலை போனதாக மாறச்செய்வாய்


உன்னை தினம் நினைத்திடும் உந்தன் பிள்ளை முகம் பாரும்
அளவில்லா வரங்களை அள்ளித் தாருமே
இன்றும் என்றும் உந்தன் பிள்ளையாக நாளும் வாழ வேண்டும்
எந்தன் உயிர் சென்ற பின்னும் உந்தன் இல்லம் தங்கவேண்டும்







 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா