மாதாபாடல்கள் | தேவலோக ஜோதியே |
தேவலோக ஜோதியே பூமியாளும் தீபமே வல்ல தேவன் உன்னையே வாழ்த்துகிறோம் உன்னையே - அன்னையே வாழ்த்துகிறோம் உன்னையே நினைக்க நினைக்க இன்பமே நீதானம்மா மனம் தேடுகின்ற நிம்மதியும் நீதானம்மா ஆழியோரக் கோவில் கொண்ட அற்புதமே - உந்தன் அருள்வடியும் பார்வையாலே இருள் கலைபவளே அள்ள அள்ளக் குறையாத அருட்கடலே - நான் சொல்லச் சொல்ல இனிமையிலும் அருளமுதே எழில் பொங்கும் வேளைநகர் எழுந்தவளே எத்திசையும் புகழ் பரவும் மரகதமலரே கல்வாரி மழை தந்த கனியமுதே கரையில்லாத கன்னிகை இறைபரமே |