Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

மாதாபாடல்கள் தாயே என் ஜீவ மாதாவே

தாயே என் ஜீவ மாதாவே
தணியாத என் தாகம் தீர்த்து வைத்தாய்
சேயுந்தன் என் குரல் கேட்குமுன்னே
சேர்ந்தணைத்து எமமை தேற்றிடுவாய்

அலைகடல் மீது நான் துடுப்பின்றித் தவித்தேன்
அம்மா என்றோர்க்கு நீ ஓடி வந்தாய்
அன்பின்காற்றில் அகன்றிடத்தானே
அடைக்கலம் நீயென்று காத்திருந்தாய்
அருள்நிறை மரியே ஆரோக்கியத்தாயே - உந்தன்
ஆதாரம் நின்பாதம் நீயல்லவோ -2

குழந்தை கரம் நீட்டி நீந்தி வந்தோம் - எங்கள்
குறை தீர்க்கும் ஜீவத்தாய் நீயல்லவே
கத்தர் தாமே கருணையின் ஊற்றே
கவலைகள் போக்கி உம் அருமருந்தே
கதியே வந்தோம் உன் பாதம் பணிந்தோம்
பரமனைச் சுமப்பவளே தேவ அன்னையே
உம்மைப் பண்போடு சிரம் தாழ்த்தினோம் - அம்மா
பண்போடு சிரம் தாழ்த்தினோம்


 

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா