மாதாபாடல்கள் | தாயே எம் தாயேயம்மா |
தாயே எம் தாயேயம்மா வாழ்த்துகின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் (2) வானத்து விண்மீன்கள் கீழிறங்கி வந்ததோ மரியே உம் சிரசினில் மகுடமாய் நின்றதோ (2) பொங்கும் கதிரவனும் ஆடையாய் ஆனதோ (2) தண்ணொளி நிலவும் சிலம்பாய் அமைந்ததோ பெண்களுள் உமைப்போல பேறுடையாள் உண்டோ பெண்மையின் முழுமையும் உம்மிடமன்றோ (2) அருளும் ஆற்றலும் இறைவன் தந்தார் (2) ஆண்டவர் அடிமையாய் உம்மைத் தேர்ந்தார் |