மாதாபாடல்கள் | தாயான தியாகமே சுடரே |
சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா தாயான தியாகமே சுடரே நெஞ்சில் தாரகை சூடும் தாயே உந்தன் தாராள துணை கொண்டு வந்தோம் தாயே அருள் தாரம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா தாயே எம் தஞ்சமது நீயே எம்மை வளமாக நிறைவாயம்மா வாடும் வாழ்வினை வளமாக்கும் வரமே வான்லோக அருள் வீசுமே சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா உன் தூய ஆலயம் நாடி கூடும் விசுவாசக் குலம் பாரம்மா என்றும் விடியாத வாழ்வென்றும் வீழ்ந்தோர் வீழ்ந்தெழச் செய்வாயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா நோயுற்று நலிந்தோரின் வாழ்வில் - கண்டு சுகம் கோடி தருவாயம்மா உந்தன் தெய்வீகத் திருப்பாதம் கண்டோம் ஆறுதல் அடைந்தோமம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா ஆவியின் அருள்பேறு கொண்ட அன்பர் இயேசுவை ஈன்ற தாயே தூய பரிவோடு வளர்த்த உன் மகனை எமக்காக இழந்தாயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா பாவ இருள் போக்கிடும் ஒளியே ஜீவ பாதையின் வழிகாட்டியே தேடும் தேவையின் உறுதுணை நீயே பேரன்பு கொண்டாயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா துயரங்கள் எனைச் சூழும் போதும் கண்ணீரைச் சிந்தும்போதும் என்றும் மாறாத உன் அன்பில் தாயே அணைத்திட வருவாயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா சாத்தானின் சுயரூபம் மாய்க்கும் வேத சக்தியின் திறன் நீயம்மா சர்வ காலமும் யொலிக்கின்ற எழிலே கருணையின் கடல் நீயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா நீர் கண்ட ஏழு வியாகுலங்கள் எங்கள் மீட்பாக விளைந்ததம்மா தன்னை பலிதந்த இயேசுவைப்போல உன்னையும் உடைத்தாயம்மா சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா தந்தையின் தெய்வீக வரமே தேவ சுதன் தந்த தெய்வத்தாயே தூய ஆவியின் கொடைபெற்றதாயே மரியே நீர் வாழ்கவே சரணம் சரணம் வியாகுலத்தாயே சரணம் சரணம் சரணமம்மா |