மாதாபாடல்கள் | சந்நிதி வந்தோம் |
சந்நிதி வந்தோம் சகாயத் தாயே உம் சந்நிதி வந்தோமே நிம்மதி தேடி வெண்மதி இதமாம் உன் பதம் வந்தோமே துணைதரும் தாயே சகாயத் தாயே இதயம் அழுத்தும் பாரங்களை - உம் ஆலய முற்றம் அகற்றிவிடும் ஊதயம் தேடி வருவோரை - உம் தாயன்புச் சிறகுகள் வருடிவிடும் பாசத்தின் பாசறை நீயம்மா - எம் பயமதைத் துடைக்கும் உம் இல்லமம்மா அழுதிடும் கண்களில் மகிழ்வு தந்து எம்மை அணைத்திடும் உள்ளமம்மா துணைதரும் தாயே சகாயத் தாயே வேண்டுதல் வேண்டியே வந்தோரின் தேவைகள் எல்லாம் தேறிவிடும் நன்றிகள் குவித்தே வருவோரின் நலன்கள் எல்லாம் ஓடிவிடும் காயங்கள் போக்கிடும் சகாயமே - எம் சோகங்கள் ஆற்றியே சுகம் தருவாய் காலங்கள் போற்றிடும் ஆதாயமே - எம் வழியில் உடன் வருவாய் துணைத்தரும் தாயே சகாயத் தாயே |