மாதாபாடல்கள் | சகாயத் தாயே மரியே |
சகாய அன்னையிடம் பக்தி கொண்டால் புதுமைகளைக் காண்பீர்கள் - 2 சகாயத் தாயே மரியே உம்மில் சகலமும் தேடியே வந்தோம் குறைகளைத் தீர்ப்பாய் மரியே தூயவர் இயேசுவின் வழியே மரியே மரியே வாழ்க எங்கள் சகாயமே நீ வாழ்க அன்னையிடம் பக்தி கொண்டால் புதுமைகளைக் காண்பீர்கள் அவரில் அடைக்கலம் நாடியோரில் பலனின்றி திரும்பிட கேட்டதில்லை மரியே மரியே வாழ்க எங்கள் சகாயமே நீ வாழ்க ஜெபமாலை தினம் ஜெபித்தால் நாளெல்லாம் நலம் பெறுவோம் பரிந்துரை செய்திடும் அன்னையிடம் விரும்பியே செல்வோம் வளம் பெறுவோம் மரியே மரியே வாழ்க எங்கள் சகாயமே நீ வாழ்க |